Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பவும் இதே மாதிரியே அடிச்சு விளையாடுவீங்களா.. பாஸ்.!?!

கார்டிப்: ஆஸ்திரேலியாவுடன் நடந்த சாம்பியன்ஸ் டிராபி வார்ம் அப் போட்டியில் அடி பின்னி எடுத்து விட்டது இந்தியா. முதல் போட்டியில் சதம் போட்ட திணேஷ் கார்த்திக், இந்தப் போட்டியிலும் செமத்தியான சதம் அடித்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். டோணி ஓகே.. 91 ரன்கள் எடுத்தார்.

முதல் வார்ம் அப் போட்டியில் இலங்கையை நையப் புடைத்தது இந்தியா.அப்போட்டியில் விராத் கோஹ்லியும், திணேஷ் கார்த்திக்கும் ஆளுக்கொரு சதம் போட்டு அசத்தினர்.

இந்தநிலையில் நேற்று நடந்த 2வது வார்ம் அப் போட்டியில் ஆஸ்திரேலியாவை பிய்த்து எடுத்து விட்டது இந்தியா. முதலில் பேட் செய்து 308 ரன்களைக் குவித்த இந்தியா, அடுத்து அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை வெறும் 63 ரன்களில் சுருட்டி விட்டது.

சரி ஹைலைட்ஸ் பார்ப்போமா...

211 ரன்

211 ரன்

திணேஷ் கார்த்திக்கும், கேப்டன் டோணியும் நேற்று பிரமாதமாக ஆடினர். இருவரும் சேர்ந்து 211 ரன்களைக் குவித்தனர்.

91 ரன்களை விளாசிய டோணி

91 ரன்களை விளாசிய டோணி

டோணி நேற்றைய போட்டியில் 91 ரன்களை விளாசினார்.

முதலில் மோசமான தொடக்கம்

முதலில் மோசமான தொடக்கம்

இந்தியாவின் பேட்டிங் ஆரம்பத்தில் சொதப்பலாகவே இருந்தது. அதாவது 55 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. பின்னர்தான் திணேஷும், டோணியும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை ஒரு கை பார்த்தனர்.

சீரில்லாத ஷிகார் தவன்

சீரில்லாத ஷிகார் தவன்

ஷிகார் தவன் முதல் போட்டியிலும் சரியாக ஆடவி்ல்லை. நேற்றைய போட்டியிலும் ஆட முடியவில்லை. ரோஹித் சர்மாவும் ஜொலிக்கவில்லை.

முரளி விஜய் வேஸ்ட்

முரளி விஜய் வேஸ்ட்

முரளி விஜய்யும் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியிலும் இவர் சொதப்பினார். இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி சரிவரவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபத்பாந்தவன் திணேஷ் கார்த்திக்

ஆபத்பாந்தவன் திணேஷ் கார்த்திக்

ஆனால் திணேஷ் கார்த்திக் முதல் போட்டியிலும் அசால்ட்டாக ஆடினார். நேற்றைய போட்டியில் அட்டாக்காக ஆடினார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 140 பந்துகளைச் சந்தித்து 146 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டோணி அடிச்சா....

டோணி அடிச்சா....

டோணியோ 77 பந்துகளை மட்டுமே சந்தித்து 91ரன்களைக் குவித்தார்.

விஸ்வரூபம் எடுத்த உமேஷ் யாதவ்

விஸ்வரூபம் எடுத்த உமேஷ் யாதவ்

பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவின் வேகப் பந்து வீச்சு வீழ்ச்சியைக் கொடுத்தது.உமேஷ்யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். இஷாந்த் சர்மாவுக்கு 3 விக்கெட்கள் கிடைத்தன.

23.3 ஓவர்களிலேயே கோவிந்தா

23.3 ஓவர்களிலேயே கோவிந்தா

இந்தியாவின் வேகத்தை சந்திக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 63 ரன்களில் சுருண்டு போனது.

ரொம்ப மோசம்தான்

ரொம்ப மோசம்தான்

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எடுத்த மிக மோசமான, ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது அதிகாரப்பூர்வமில்லாத, பயிற்சிப் போட்டி என்பதால் இது ரெக்கார்டில் ஏறாது.

ரைட்டு.. நிஜ போட்டி வருது

ரைட்டு.. நிஜ போட்டி வருது

அடுத்து நிஜ போட்டிகள் தொடங்கவுள்ளன. நாளை முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. அடுத்து ஜூன் 11ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் மோதுகிறது. அடுத்து ஜூன் 15ம் தேதி பாகிஸ்தான் போட்டி.

அப்பவும் இதே மாதிரியே அடிச்சு விளையாடுவீங்களா.. பாஸ்களா..!

Story first published: Wednesday, June 5, 2013, 13:13 [IST]
Other articles published on Jun 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+