கேரம்-உலக சாம்பியனான தமிழக வீராங்கனைக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம் பரிசு

கேரம் விளையாட்டில் 1997ம் ஆண்டிலிருந்து சப்-ஜுனியர் மாநில சாம்பியனாக உள்ளவர் இளவழகி. இதுவரை சர்வதேச, தேசிய அளவி்ல் 37 பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளார்.
அமெரிக்கா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
சார்க் சாம்பியன் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும், ஆசிய சாம்பியன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண் கேரம் சேம்பியன்களில் முதல் ரேங்கிலும் மற்றும் இந்திய பெண் ரேங்கில் 3வது இடத்திலும் உள்ளார்.
சமீபத்தில் பிரான்சில் உலக கேரம் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழகத்திற்கு புகழ் சேர்த்துள்ளார்.
இவர் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள விமானப் பயணக் கட்டணத்துக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 30,000 வழங்கியது.
இந் நிலையில் இளவழகி, உலக அளவில் கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளதால், அவரது சாதனைகளை பாராட்டும் வகையிலும் அவர் தொடர்ந்து விளையாடி தமிழகத்துக்கு புகழ் சேர்க்க வசதியாகவும், தமிழக முதல்வர் கருணாநிதி இன்று இளவழகியை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications