யுஎஸ் ஓபன்:29 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்ற தாய்-கிளைஸ்டர்ஸ் சாதனை

வெற்றி கோப்பையை தனது ஒன்றரை வயது மகளுடன் இணைந்து போஸ் கொடுத்து பார்ப்பவர்களை பரவசம் அடைய செய்தார்.
கடந்த 2007ல் திருமணம் செய்து கொண்டு டென்னிஸை உலகை விட்டு வெளியேறிய கிம் கிளைஸ்டர்ஸ்க்கு கடந்த ஆண்டு பிப்ரவரியி்ல் ஜெடா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள துவங்கினார்.
நேற்று நடந்த யுஎஸ் ஓபன் பெண்கள் ஒற்றையர் பைனலில் அவர், டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாகியை எதிர்கொண்டார்.
இதில் சூப்பராக விளையாடிய கிளைஸ்டர்ஸ் 7-5, 6-3 என வென்றார். இதையடுத்து 29 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்ற முதல் தாய் என்ற சாதனை படைத்தார்.
பைனலில் பெடரர்-ஜூவன் மார்டின்...
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்7-6, 7-5, 7-5 என செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினாவில் ஜூவன் மார்டின் டெல் பெட்ரோ 6-2, 6-2, 6-2 என எளிதாக ஸ்பெயினின் ரபெல் நடாலை தோற்கடித்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications