Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்ஸ்: கிரீஸில் ஜோதி ஏற்றப்பட்டது!

Olympic Torch
ஒலிம்பியா : 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெறுவதை ஒட்டி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.

லண்டனில் வரும் ஜூலை மாதம் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பதினைந்து நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன.

ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக மே 10 ம்நாள் வியாழக்கிழமை கிரீஸில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கியதை நினைவு கூறும் விதமாக, கிரீஸ் நாட்டில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.

பழமைவாய்ந்த விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள ஹீரா ஆலயத்தில் இந்த விழா நடைபெற்றது. சூரிய ஒளிக் கதிர்களை நேரடியாக கிண்ண வடிவ கண்ணாடியில் விழச்செய்து அந்த ஒளியில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. ஒலிம்பியா கிராமத்திலிருந்து பல நாடுகள் வழியாக பயணம் செய்ய உள்ள இந்த ஒலிம்பிக் ஜோதி, இறுதியாக 70 நாட்கள் கழித்து லண்டனை அடைய உள்ளது.

இன்று தொடங்கும் இந்த ஓட்டம் மே 18 ம் தேதி இங்கிலாந்தை சென்றடைகிறது. பின்னர் நாடு முழுவதும் 70 நாட்களுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணம் செய்யும். இந்த சுடர் 2900 கிலோ மீட்டர்கள் அதாவது 1800 மைல்களை கடக்கிறது. 500 விளையாட்டு வீர்ர்கள் இந்த சுடரை ஏந்திச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, May 10, 2012, 16:11 [IST]
Other articles published on May 10, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+