Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: வில்வித்தை, குத்துச்சண்டை, பாட்மிண்டன் போட்டிகளில் இன்று களமிறங்குகிறது இந்தியா

Diju
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள வில்வித்தை, பாட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை, ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இன்று உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள வில்வித்தை, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டென்னிஸ், ஜூடோ, துடுப்பு படகு, பளுத் தூக்குதல் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

வில்வித்தை:

ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இன்று தனிநபர் வெளியேற்றுதல் சுற்றில் இந்தியாவின் ஜெயந்தா தாலுக்தர், அமெரிக்காவின் ஜேக்கப் வெளகீ உடன் மோத உள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் 1.45 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.

அதேபோல மாலை 8.45 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், கியூபாவின் ஜூவான் கார்லஸ் ஸ்டீவன்ஸ் உடன் மோத உள்ளார். மேலும் 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் ராகுல் பானர்ஜி, மங்கோலியாவின் ஜான்ஸ்டன் கன்டக்ஸை எதிர் கொள்ள உள்ளார்.

பெண்களுக்கான தனிநபர் வெளியேற்றுதல் சுற்றில் இந்தியாவின் சேக்ரோவாலு ஸ்வ்ரோ, அமெரிக்காவின் ஜெனீபர் நிகோல்ஸை சந்திக்க உள்ளார். இந்த போட்டி மாலை 3.15 மணிக்கு நடைபெற உள்ளது.

பாட்மிண்டன்:

ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் 'டி' பிரிவை சேர்ந்த இந்தியாவின் காசப் பரூபள்ளி, வியட்நாமின் டின் மின் குயென் உடன் மோத உள்ளார். இந்த போட்டி பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளது.

மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ள பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் 'பி' பிரிவை சேர்ந்த ஜூவாலா கட்டா, அஸ்வினி போண்ணப்பா ஜோடி, சிங்கப்பூரை சேர்ந்த ஷின்டா முலியா சாரி, லீ யோ ஜோடியை சந்திக்க உள்ளது.

கலப்பு இரட்டையர் போட்டியில் சி பிரிவை சேர்ந்த இந்தியாவின் ஜூவாலா கட்டா, டிஜூ ஜோடி, தென் கொரியாவின் யாங் டே லீ-ஜங் இன் ஹா ஜோடியை இரவு 11 மணிக்கு சந்திக்க உள்ளது.

குத்துச்சண்டை:

ஆண்களுக்கான லைட் பிளை வெயிட் 49 கிலோ எடை பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்தியா வீரர் தேவேந்திரோ சிங், ஹோண்டூராஸ் வீரர் பாய்ரன் மோலினா உடன் மோத உள்ளார். இந்த போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

அதேபோல லைட் பிளை வெயிட் 64 கிலோ எடை பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்தியாவின் மனோஜ் குமார், துர்க்மேனிஸ்தான் வீரர் சேர்தர் ஹூடேபர்டியே உடன் மோத உள்ளார். இந்த போட்டி நாளை அதிகாலை 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.

ஜூடோ:

பெண்களுக்கான 63 கிலோ எடை பிரிவில் வெளியேற்றுதல் சுற்றில் இந்தியாவின் கரிமா சவுத்ரி, ஜப்பான் வீராங்கனை யோஷி யுனோ உடன் மோத உள்ளார். இந்த போட்டி பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

டென்னிஸ்:

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோஹன் போண்ணா ஜோடி, பிரான்ஸின் ஜூலியன் பென்னேட்டி, ரிச்சார்ட் கியஸ்கியூட் ஜோடியை சந்திக்க உள்ளது.

அதேபோல மற்றொரு இந்திய ஜோடியான லியாண்டர் பயஸ், விஷ்ணு வர்தன்-பிரான்ஸின் லோட்ரா, சங்கா ஜோடியை சந்திக்க உள்ளது.

துடுப்பு படகு:

ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்வர்ன்சிங் பங்கேற்க உள்ளார். இந்த போட்டி மாலை 2.20 மணிக்கு நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள ஆண்களுக்கான ட்புள் ஸ்கல் போட்டியில் இந்திய வீரர்கள் சந்தீப் குமார், மன்தீப் சிங் கலந்து கொள்ள உள்ளனர்.

பளுதூக்குதல்:

ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடை பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் கலந்து கொள்ள உள்ளார். மாலை 2.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.

Story first published: Tuesday, July 31, 2012, 12:09 [IST]
Other articles published on Jul 31, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+