For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்: தடகளம், நீச்சல், பாட்மிண்டன் போட்டிகளில் இன்று இந்தியா கலக்குமா?

By
London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள பாட்மிண்டன், தடகளம், ஹாக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தடகளம்:

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வட்டு ஏறிதல், குண்டு ஏறிதல், தத்தி தாண்டுதல் போட்டிகளில் இந்தியர்கள் களமிறங்க உள்ளனர்.

குண்டெறிதல்:

ஆண்களுக்கான தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் சிங் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

வட்டு ஏறிதல்:

பெண்களுக்கான தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணபூனியா, சீமா அன்டில் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி இன்று நள்ளிரவு 11.40 மணிக்கு நடைபெற உள்ளது.

தத்தி தாண்டுதல்:

பெண்களுக்கான தகுதி சுற்று இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்தியா வீராங்கனை மயுக்கா ஜானி பங்கேற்கிறார்.

குத்துச் சண்டை:

வல்டர் வையிட் (69 கிலோ) பிரிவின் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரோல் ஸ்பென்ஸ் உடன் மோத உள்ளார். இந்த போட்டி நாளை அதிகாலை 2 மணிக்கு நடைபெற உள்ளது.

ஹாக்கி:

மாலை 6.15 மணிக்கு நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில், இந்தியா, ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

துப்பாக்கி சுடுதல்:

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் பிரோன் தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ஜாய்தீப் கர்மக்கர் பங்கேற்கிறார். இந்த போட்டி மாலை 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தகுதி பெறும் வீரர்களுக்கான இறுதிப்போட்டி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அதேபோல ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் தகுதி சுற்று-2 போட்டியில் இந்தியாவின் விஜய்குமார் பங்கேற்கிறார். இந்த போட்டி 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தகுதி பெறும் வீரர்களுக்கான இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறும்.

பாட்மிண்டன்:

பெண்களுக்கான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் யன் யங்கை எதிர்கொள்ள உள்ளார். இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நீச்சல்:

ஆண்களுக்கான 1,500 மீட்டர் பிரீ ஸ்டைல் தகுதி சுற்று போட்டியின் இந்தியாவின் உலால்மத் ககன் பங்கேற்க உள்ளார். போட்டி நேரம்: மாலை 3 மணி.

Story first published: Friday, August 3, 2012, 12:42 [IST]
Other articles published on Aug 3, 2012
English summary
Yet another big day for Indian contingents at London Olympics today as medal prospects Gagan Narang, Vijay Kumar, Krishna Poonia, Sania Nehwal will be seen in action today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+