For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்: பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

By
London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான கால்பந்து போட்டியில், நியூசிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது. மற்ற லீக் போட்டிகளில் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், சுவீடன் அணிகள் வெற்றி பெற்றன.

லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை நடைபெறும் துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னோடியாக பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் நேற்று இரவு துவங்கியது. இதில் கார்டிப் மில்லெனியம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் 'இ' பிரிவை சேர்ந்த இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்டெபைன் ஹட்டன் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு கடைசி வரை இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டியின் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல 'எப்' பிரிவை சேர்ந்த ஜப்பான், கனடா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'எப்' பிரிவை சேர்ந்த சுவீடன், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஸ்வீடன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

'ஈ' பிரிவை சேர்ந்த கேமரூன், பிரேசில் அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆடிய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'ஜி' பிரிவில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

Story first published: Thursday, July 26, 2012, 10:06 [IST]
Other articles published on Jul 26, 2012
English summary
The Football Ferns went down in the first competitive contest of the London Olympics losing 1-0 to Britain in the women's soccer tournament at the Millennium Stadium.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+