ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி: இந்திய அணி வெளியேறியது, பதக்க கனவு கலைந்தது

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஆண்களுக்கான தனி நபர் துடுப்பு படகு போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் சுவர்ன் சிங் விர்க் போட்டியிட்டார். இதில் 2 ஆயிரம் மீட்டர் பந்தய தூரத்தை சுவர்ன் சிங் 7 நிமிடம் 11.59 வினாடிகளில் கடந்து, 4வது இடத்தை பிடித்தார். இதனால் சுவர்ன் சிங் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
அதேபோல இரட்டையர் பிரிவு "லைட் வெயிட்' துடுப்பு படகு போட்டியின் அரையிறுதிக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் சந்தீப் குமார், மன்ஜீத் சிங் ஜோடி கலந்து கொண்டது. இதில் இந்திய ஜோடி பந்தய தூரத்தை 6 நிமிடம் 54.20 வினாடிகளில் கடந்து 6வது இடம் பிடித்தது. இதனால் இந்திய ஜோடி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு வாய்ப்பை இழந்தது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களில் பதக்க வாய்ப்புகள் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications