Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: முதலிடத்தில் சீனா-4 பதக்கங்களுடன் 46வது இடத்தில் இந்தியா

Medals
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் சீனா மொத்தம் 77 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 1 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களுடன் இந்தியா 46வது இடத்தில் உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக பதக்கங்களை வென்று வரும் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 36 தங்கம், 22 வெள்ளி, 19 வெண்கலம் உட்பட மொத்தம் 77 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. இதுவரை பங்கேற்றுள்ள போட்டிகளில் 34 தங்கம், 22 வெள்ளி, 25 வெண்கலம் என்று மொத்தம் 81 பதக்கங்களை பெற்றுள்ள அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க முயன்று வருகிறது.

இங்கிலாந்து அணி 22 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 48 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் கொரியா 12 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 25 பதக்கங்களை பெற்றுள்ளது.

அதன்பிறகு ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, கசகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 81 வீரர்கள், வீராங்கனைகள் உடன் களமிறங்கிய இந்தியா இதுவரை 1 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 4 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 46வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, August 9, 2012, 14:17 [IST]
Other articles published on Aug 9, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+