Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முன்னேறினார் விஜேந்தர்சிங்

Vijender Singh
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் விஜேந்தர்சிங் அமெரிக்காவின் டெரல் கவுஷாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் விஜேந்தர் சிங் 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் 5-5 என சமன் செய்தார்.

மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் இருவரும் படு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். வீரர்கள் இருவரும் சளைக்காமல் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் 16-15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் விஜேந்தர்சிங்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர் விஜேந்தர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 3, 2012, 9:13 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+