Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி- ஈகோ ஹீரோக்கள் பூபதி, போபண்ணாவுக்கு ஆப்பு

Mahesh Bhupathi and Rohan Bopanna
டெல்லி: டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பூபதியும் போபண்ணாவும் தூக்கி வீசப்பட்டுவிட்டனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் 6 பேர் சென்றிருந்தனர். ஆனால் ஒருவரும் காலிறுதியைத் தாண்டவில்லை. அதுவும் அனுபவம் வாய்ந்த வீரரான லியாண்டர் பயசுடன் ஜோடி சேரமாட்டோம் என்று ஈகோவாக அறிக்கை மேல் அறிக்கைவிட்டு ஆட்டம் போட்டனர் மகேஷ் பூபதியும் போபண்ணாவும். ஒலிம்பிக் போட்டிக்காக அப்போது பொறுமையாக இருந்த இந்திய டென்னிஸ் சங்கம் இப்போது தமது அதிரடி ஆட்டத்தை காண்பித்திருக்கிறது.

செப்டம்பர் 14-ந் தேதி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய- ஓசியானா பிளை ஆப் சுற்றுப் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்துடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சோம்தேவ் தேர்வர்மன், லியாண்டர் பயஸ் இருவரது பெயரும் வெவ்வேறு காரணங்களுக்காக பரிசீலிக்கப்படவில்லை. ஆனால் போபண்ணா, பூபதி பெயர் பரிசீலிக்கப்பட்டு தூக்கிவீசப்பட்டது.

இந்திய அணியில் முழுவதும் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். யுகி பாம்ப்ரி, விஷ்ணு வர்தன். சகெத் மைனெனி , ஸ்ரீராம் பாலாஜி, சனம்சிங், டிவிஜ் ஷரண் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொமப ஆடினா இப்படித்தான் ஆப்பு என்கிறது டென்னிஸ் சங்கம்!

Story first published: Sunday, August 19, 2012, 15:33 [IST]
Other articles published on Aug 19, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+