Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சுரேஷ் கல்மாடி போக கூடாது-அஜய் மாக்கன் காட்டம்

Suresh Kalmadi
மும்பை: காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு போக கூடாது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ரூ.90 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட 10 பேர் மீது சி.பி.ஐ தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், இந்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல அனுமதி அளிக்குமாறு சுரேஷ் கல்மாடி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணைக்கு பிறகு, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல சுரேஷ் கல்மாடிக்கு அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் விளையாட்டு போட்டிகளில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல கூடாது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

சுரேஷ் கல்மாடியின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படும் வரை, ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியாது என்று நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் முடிவில் இருந்து சுரேஷ் கல்மாடியாக விலகி கொள்ள வேண்டும்.

Story first published: Saturday, July 14, 2012, 16:56 [IST]
Other articles published on Jul 14, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+