இன்று மலேசியாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம்
கோலாலம்பூர்: இன்று மலேசியாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கவுள்ளது.
சீனாவின் சிறப்பு ஒலிம்பிக் விமானம் மூலம் உலகைச் சுற்றி வரும் இந்த ஜோதி சில நாட்களுக்கு முன் டெல்லி வந்தது. அங்கு சுடர் ஓட்டம் முடிவடைந்த பின் தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டது.
இந் நிலையில் அது மலேசியா கொண்டு வரப்பட்டது. இன்று கோலாலம்பூரில் உள்ள சுதந்திர சதுக்கத்திலிருந்து புகழ் பெற்ற பெட்ரோனாஸ் கோபுரம் வரை 16.5 கி.மீ தூரத்துக்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் சுடர் ஓட்டம் நடக்கவுள்ளது.
சீனாவை எதிர்த்து இந்த சுடருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால் ஓட்டம் ஆரம்பிக்கும் வரை ஒலிம்பிக் ஜோதி வைக்கப்பட்டுள்ள இடத்தை மலேசிய அரசு ரகசியமாக வைத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications