Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் பேட் கைப்பிடிகளில் மாற்றம்

Cricket bat
மெல்போர்ன்: கிரிக்கெட் தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்யும் மெல்போர்ன் கிரிக்கெட் சங்கம், பாரம்பரியமான கைப்பிடிகளோடு தயாரிக்கப்பட்ட பேட்டுகளை மட்டுமே கிரிக்கெட் வீரர்கள் உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சாதரணமாக கிரிக்கெட் பேட்டின் கைப்பிடிகள், ரப்பர், மூங்கில் மற்றும் பசைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பு முறை எம்.சி.சி கிரிக்கெட் சங்கத்தால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் கிராபைட், டைட்டேனியம், கார்பன் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட கைப்பிடிகளை கொண்ட பவர் பேட்டுகளை உபயோகிக்கின்றனர்.

இந்த பவர் பேட்டுகள், பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஆடுகளங்களிலும், சிறிய மைதானங்களிலும் மிகச் சிறந்த பவுலர்களின் பந்துவீச்சை எளிதில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து விளையாட உதவுகிறது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையை மாற்றும் முயற்சியில் மெரில்போர்ன் கிரிக்கெட் சங்கம் பாரம்பரியமான பேட்டுகளை பயன்படுத்த சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

புதிய பவர் பேட்டுகளுக்குப் பதிலாக அவற்றைப் போலவே எடை குறைவான, பேட்ஸ்மேன்கள் எளிதில் அடித்து விளையாட உதவும் வகையில் பாரம்பரிய கைப்பிடி கொண்ட பேட்களை தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்று எம்.சி.சி. பரிந்துரைத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+