Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெய்ஜிங்-6வது தங்கம் வென்றார் பெல்ப்ஸ்

Michael Phelps
பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இன்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இதன் மூலம் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இவர் 6 தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பெய்ஜிங்கிலும் 6 தங்கத்தை வென்றுவிட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதன் மூலம் உலகிலேயே மிக அதிக தங்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுவிட்டார்.

அதே நேரத்தில் 1972ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் 7 தங்கம் வென்று, ஒரே ஒலிம்பிக்ஸில் அதிகபட்ச தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ்.

இன்று மேலும் ஒரு போட்டியிலும் பங்கேற்கவுள்ள பெல்ப்ஸ் இன்னொரு தங்கம் வென்றால் ஸ்பிட்சின் சாதனையை ஈடு செய்துவிடுவார். கடைசியாக நாளைய 400 மீட்டர் போட்டியிலும் பங்கேற்கும் இன்னொரு தங்கமும் வென்றால் உலகிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் மிக அதிக தங்கம் வென்றவர் என்ற பெருமையையும பெறுவார் பெல்ப்ஸ்.

இன்று காலை நடந்த 200 மீட்டர் நீச்சல் போட்டியில் பெல்ப்ஸ் அந்த தூரத்தை 1:54:23 நிமிடங்களில் கடந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முன் அமெரிக்காவில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தான் படைத்த 1:54.80 நிமிடங்கள் என்ற சாதனையை அவரே முறியடித்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+