Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அசாருதீனுக்கு அழைப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருமாறு முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீனுக்கு அந்த அணி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து அசாருதீன் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், பிஷன் சிங் பேடியின் பதவிக்காலம் கடந்த சீசனோடு முடிந்து அவர் போய் விட்டார். இதையடுத்து தற்போது அசாருதீனை அணுகியுள்ளோம். இருப்பினும் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றார்.

Mohammad Azharuddin offered role as Jammu and Kashmir coach

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக ஆயுள் கால தடை விதிக்கப்பட்டவர் அசாருதீன். இருப்பினும் இந்த நடவடிக்கை செல்லாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து அசாருதீன் மீதான சிக்கல்கள் நீங்கின.

பயிற்சியாளர் வாய்ப்பு குறித்து அசாருதீனின் செயலாளர் முஜீப் கான் கூறுகையில், இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை அசாருதீன் என்றார்.

Story first published: Saturday, August 17, 2013, 16:29 [IST]
Other articles published on Aug 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+