For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னது மோர்னே மோர்கெல்... மணிக்கு 173.9 கி.மீ பந்து வீசினாரா?

By Mayura Akilan

பெங்களூர் : நடப்பு ஐபில் 6வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மோர்னே மோர்கெல் பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது மணிக்கு 173.9 கி.மீ வேகத்தில் பந்து வீசியதாக பந்து வீச்சைக் கணக்கிடும் கருவி பதிவு செய்து தொலைக்காட்சியிலும் அது பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 6வது தொடரில் பெங்களூரில் கடந்த 16-ந் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. பெங்களூர் அணிக்கு எதிராக 2-வது ஓவரை மோர்கெல் வீசினார். மோர்கெல் பந்து வீசிக் கொண்டிருந்த போது டிவியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே கடும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க முடியும். ஏன் என்று கேட்கிறீர்களா?

Morkel

மோர்கலின் பந்து வீச்சனாது மணிக்கு 173.9 கிலோ மீட்டர் வேகம் எனக் காண்பிக்கிறது பந்து வீச்சு வேகத்தை கணக்கிடும் கருவி! இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு தென்னாப்பிரிக்கா வீரரான ஸ்டெயின் உடனே டிவிட்டரில் ஒரு தட்டுவிட்டார்... மோர்கல் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்.. அவரது பந்து வீச்சு வேகம் 173.9 கிமீ?ஹா!ஹாஹா! என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏன் இந்த கிண்டல் என்கிறீர்களா? பாகிஸ்தானின் சோயிப் அக்தர், கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுதான் அதிவேக பந்துவீச்சாக சாதனையாக இருக்கிறது..

ஐபிஎல் போட்டிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கூட மோர்கலின் வேகம் என்பது 144 முதல் 148 கிலோமீட்டர் வேகமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரையில் ட்விட்டரில் நக்கலடித்த ஸ்டெயில்தான் அதிவேக பந்துவீச்சாளராக அதாவது மணிக்கு 152.48 கி.மீ. வேகத்தில் பந்து வீசக் கூடியவர் என்கிறது அந்த இணையதளம்... அதனால்தான் அவர் கிண்டலடித்திருக்கிறார்.

அப்புறம் எப்படி மோர்கல் ..வேகம் மணிக்கு 173.9 கி.மீ என்று கணக்கிடப்பட்டது? இப்படி கணக்கிட்டதை ஏன் ஐபிஎல் சாதனைப் பட்டியலில் சேர்க்கலை? என்கிற குழப்பம் எல்லோருக்குமே இருக்கிறது..

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனம்னு புலம்ப வேண்டியதுதானோ?

Story first published: Thursday, April 18, 2013, 13:24 [IST]
Other articles published on Apr 18, 2013
English summary
Did Delhi Daredevils and South Africa paceman Morne Morkel bowl the fastest ball in cricket history on Tuesday night (April 16) during the IPL 2013 game? Well, if you go by the speed gun's reading at M Chinnaswamy Stadium, he did bowl the fastest delivery in the history. Morkel's speed was recorded at 173.9 kph!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+