நேரு கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பட்டம் வெல்லுமா இந்தியா?

டெல்லியில் நடைபெற்றும் வரும் இந்ததொடரில், ரவுண்ட் ராபின் சுற்றில், சிரியாவுடன் டிரா செய்த, கேமரூன் அணி, மாலத்தீவு மற்றும் நேபாள அணிகளை தோற்கடித்தது. கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை ஒருகோல் அடித்து தோற்கடித்தது.
இந்திய அணி ரவுண்ட் ராபின் சுற்றில் சிரியா, மாலத்தீவு அணிகளை தோற்கடித்தது. நேபாள அணியுடனான ஆட்டத்தில் டிரா செய்தது. இதன்மூலம் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த கேமரூன் அணியும், 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கடந்த 2007 மற்றும் 2009- ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா?.
Story first published: Sunday, September 2, 2012, 13:29 [IST]
Other articles published on Sep 2, 2012


Click it and Unblock the Notifications