நேரு கோப்பைக்கான கால்பந்து தொடர்: இந்தியா-நேபாளம் இடையிலான போட்டி 'டிரா'

நேரு கோப்பைக்கான கால்பந்து தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, கேமரூன், மாலத்தீவு, சிரியா, நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்று வருகின்றன. இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. போட்டியின் இடையே அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் வீரர்கள் ஆட சிரமப்பட்டனர். மேலும் ஆடுகளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், பந்தை பாஸ் செய்ய வீரர்கள் திணறினர்.
இதனால் கடைசி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாமல், போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி அடுத்த லீக் போட்டியில் கேமரூன் அணியுடன் வரும் 31ம் தேதி மோத உள்ளது.


Click it and Unblock the Notifications