இதென்ன கூத்து..ஒலிம்பிக் கிராமத்தில் தம்பதியருக்கு தனி ரூம்.. ஓரின இணைக்கு ஒரே அறை ஓகேவாம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரஸ்ஸெல் மார்க் துப்பாக்கி சுடும் வீரர். இவரது மனைவி லௌரினும் துப்பாக்கி சுடும் வீரர். இவர்களுக்கு ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றில், லண்டன் ஒலிம்பிக்ஸில் ஒரே அறையில் இருவரும் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கடும் அதிருப்தியடைந்த இருவரும், எத்தனையோ ஓரினச் சேர்க்கையாளர்களுக்கெல்லாம் ஒரே அறையை கொடுத்திருக்கும்போது எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கணவன், மனைவி இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர்கள். அவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தனித் தனியே தங்கலாம்.. இல்லையெனில் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கிக் கொள்ளட்டும் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துவிட்டது.
Story first published: Tuesday, July 17, 2012, 8:14 [IST]
Other articles published on Jul 17, 2012


Click it and Unblock the Notifications