Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துப்பாக்கி சுடுதலில் இன்று 2-வது பதக்கம் வெல்வாரா ககன் நரங்?

Gagan Narang
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுத் தந்த ககன் நரங் இன்று துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியில் களமிறங்குகிறார்.

லண்டன் ஒலிம்பிக் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டும் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ககன் நரங்கும், ஜாய்ப்தீப் கர்மாகரும் களமிறங்க உள்ளனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு இப்போட்டி நடைப்றுகிறது.

ஒலிம்பிக் சாம்பியன் உக்ரைனின் ஆர்துர் அய்வாஸ்யான், உலக சாம்பியன் பெலாரசின் செர்ஜி மார்டினோவ் ஆகியோரும் களத்தில் இருப்பதால் ககன் நரங்குக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

Story first published: Friday, August 3, 2012, 8:45 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+