Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

டெல்லி: சர்வதேச விதிப்படி தேர்தல் நடத்தாத இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நீட்டித்துள்ளது.

சர்வதேச விதிப்படி தேர்தல் நடத்தாத இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கடந்த 2012 டிசம்பரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை செய்தது.

தவிர, "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஆனால், இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தவிர, இந்திய சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிடலாம் என உள்ளது என்பதை தெரிவித்தது.

Olympics ban on India stays as IOC rejects half-baked

இந்நிலையில்அண்மையில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட முடியாது முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்கஸ் ரோஜருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீடிக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.

இந்த தடை நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

Story first published: Friday, September 6, 2013, 6:52 [IST]
Other articles published on Sep 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+