லண்டன் ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி: இந்தியாவின் பூனியா இறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியைப் பொறுத்தவரை 63 மீட்டர் தூரம் தட்டு எறிபவர்கள் அல்லது சிறந்த 12 பேர் இறுதிச்சுற்றில் பங்கேற்பர்.
தகுதிச்சுற்றின் முதல் எறிதலில் தவறு செய்த கிருஷ்ண பூனியா, தனது இரண்டாவது வாய்ப்பில் 63.54 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்தார். பூனியாவைப் போலவே தனது முதல் வாய்ப்பில் தவறு செய்த சீமா, இரண்டாவது வாய்ப்பில் 61.10 மீட்டர் தூரம் எறிந்தார். இதையடுத்து
63.54 மீட்டர் தூரம் வட்டு எறிந்த கிருஷ்ண பூனியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். ஆனால் 61.10 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்ததால் சீமா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறினார்.
இன்று இரவு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கிருஷ்ண பூனியா பதக்கம் வெல்வாரா என்பது தெரிந்துவிடும்.
Story first published: Saturday, August 4, 2012, 9:47 [IST]
Other articles published on Aug 4, 2012


Click it and Unblock the Notifications