Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: குத்துச் சண்டையில் ஜெய்பகவான், துப்பாக்கி சுடுதலில் ரஞ்சன்சோதி தோல்வி

London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்காகன 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜெய்பகவான், கஜகஸ்தான் வீரரிடம் தோற்று காலிறுதி வாய்ப்பை பறிகொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின்

இந்தியாவின் ஜெய்பகவானும், கஜகஸ்தான் வீரர் கானி ஜாய்லாயோவும் மோதினர். முதல் சுற்றில் ஜெய்பகவான் 3-2 என்று முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்த சுற்றில் கஜகஸ்தான் வீரரிடம் சரமாரி குத்துகளையே ஜெய்பகவானால் பெற முடிந்தது. 2-வது சுற்றில் 10-3 என்ற கணக்கில் கஜஸ்தானின் ஜாய்லாயோ முன்னிலை வகித்தார். இறுதி சுற்றில் ஜாய்லாயோ தடுப்பு முறையை கையாண்டதால் ஜெய்பகவனால் வெல்ல முடியவில்லை. 3 சுற்றுகளின் முடிவில் 8-16 என்ற கணக்கில் இந்தியாவின் ஜெய்பகவான் தோல்வியைத் தழுவினார்.

ஜெய்பகவானின் தோல்வியால் காலிறுதிக்கான வாய்ப்பும் பறிபோனது.

துப்பாக்கி சுடுதலில் தோல்வி

லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ரஞ்சன் சோதி தோல்வியைத் தழுவினார். முதல் சுற்றில் 50க்கு 48 புள்ளிகள் எடுத்திருந்தார். அப்போது 3 பேருடன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் 44,42 புள்ளிகள்தான் அவரால் எடுக்க முடிந்தது. இதனால் மொத்தம் 150க்கு 134 புள்ளிகள் எடுத்து 11-வது இடத்துக்கு போனார்

முதல் சுற்றில் அற்புதமாக ஆடிய ரஞ்சன் சோதி சடாரென அடுத்தடுத்த சுற்றுகளில் சோபிக்காமல் போனது பெரும் ஏமாற்றத்துக்குரியது.

விஜய்குமாருக்கு வாய்ப்பு

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் விஜய்குமார் இன்று இறுதி வாய்ப்பில் பங்கேற்கிறார். முதல் சுற்றில் மொத்தம் 293 புள்ளிகள் எடுத்து 5வது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவருக்கு இறுதி வாய்ப்பு இருக்கிறது. 2-வது சுற்று இன்று நடைபெற உள்ளது.

Story first published: Friday, August 3, 2012, 9:16 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+