Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவின் ஓம்பிரகாஷ்சிங், மயூக்கா தோல்வி

Mayookha Johny
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதலில் இந்தியாவின் ஓம்பிரகாஷ் சிங் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்துவிட்டார்.

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஏ, பி ஆகிய இரு பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 40 பேர் பங்கேற்றனர். இதில் முதல் முயற்சியில் 19.40 மீ. தூரம் குண்டு எறிந்த ஓம் பிரகாஷ், அதிகபட்சமாக 19.86 மீ. தூரம் வரை குண்டு எறிந்தார். அவரின் மூன்றாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த ஓம் பிரகாஷ், அப் பிரிவில் 10-வது இடத்தையும், ஒட்டு மொத்தமாக 19-வது இடத்தையும் பிடித்தார்.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரகாஷ், தனது தேசிய சாதனையைக்கூட (20.60 மீ. தூரம் குண்டுவீசியது) தொடவில்லை. தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரீஸ் ஹோஃபா 21.36 மீ. தூரம் குண்டுவீசி முதலிடத்தையும், ஜெர்மனியின் டேவிட் ஸ்டோர்ல் 21.15 மீ. தூரம் குண்டுவீசி 2-வது இடத்தையும் பிடித்தனர். மொத்தம் 12 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

டிரிபிள் ஜம்ப் தோல்வி

இதேபோல் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் மயூக்கா தோல்வியடைந்து வெளியேறினார். லண்டன் இந்திய வீராங்கனை மயூக்கா 13-வது இடத்தை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 13.77 மீட்டர் தூரம் தாண்டினார்.

Story first published: Saturday, August 4, 2012, 9:49 [IST]
Other articles published on Aug 4, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+