சிட்னி: இந்தியாவுடனான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிங் கேப்டனாக தொடர்கிறார். காயம் காரணமாக துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் நீக்கப்பட்டு, அப்பதவி மைக் ஹஸிக்கு அளிக்கப்பட்டுள்ளது.மைக்கேல் கிளார்க் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டதை அடுத்து சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாதியிலே அவர் நாடு திரும்பிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.இவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பீராட் ஹாதின், நாதன் பிராக்கன் ஆகியோரும் இத்தொடரில் இடம்பெறவில்லை.தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி:பாண்டிங், (கேப்டன்),மைக் ஹசி (துணை கேப்டன்), ஷேன் வாட்சன், ஷான் மார்ஷ், டிம் பெய்னே, ஆடம் வோஜஸ், கேமரூன் ஒயிட், ஜேம்ஸ் ஹோப்ஸ், டப் போலிங்கர், நாதன் ஹாரிட்ஸ், ஜோன் ஹாலந்து, பென் ஹில்பென்ஹாஸ், மிட்சல் ஜான்சன், பிரட் லீ, பீட்டர் சிடில்.இந்தியா, ஆஸி. தொடர் அட்டவணை...அக். 25, முதல் போட்டி, பரோடாஅக். 28, 2வது போட்டி, நாக்பூர்அக். 31, 3வது போட்டி, டெல்லிநவ. 2, 4வது போட்டி மொகாலிநவ. 5, 5வது போட்டி ஹைதராபாத்நவ. 8, 6வது போட்டி கௌகாத்திநவ. 11, 7வது போட்டி மும்பை