கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து, 219 ரன்கள் பின்தங்கியுள்ளது.இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கார்டிப் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 435 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மூன்றாவது முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 539 ரன்கள் எடுத்திருந்தது.நேற்று தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நார்த், ஹாடின் ஜோடி அபாரமான முன்னிலையை பெற்று தந்தது. அதிரடியாக பேட் செய்த ஹாடின் 3 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடுத்து அவுட்டானார். நார்த் 125 இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 674 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.239 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து நான்காவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து, 219 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும்.