7வது தங்கம் வென்றார் பெல்ப்ஸ்-இன்னொரு சாதனைக்கு ஒரு தங்கம் பாக்கி

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஏற்கனவே ஒரு புதிய சாதனையைப் படைத்து விட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் தனி ஒரு வீரர் அதிக அளவில் தங்கப் பதக்கத்தை வென்ற சாதனைதான் அது. கடந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் தற்போதைய பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 11 பதக்கங்களை அவர் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந் நிலையில், 1972ம் ஆண்டு மூனிச் ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஆளாக 7 தங்கப் பதக்கங்களை வென்ற சாதனையை வைத்துள்ள சக அமெரிக்க வீரர் மார்க் ஸ்பிட்சின் சாதனையை தற்போது பெல்ப்ஸ் சமன் செய்துள்ளார். இன்று அவர் தனது 7வது தங்கப் பதக்கத்தை வென்றார். இன்னும் ஒரு தங்கம் வென்றால் அதிக அளவில் தங்கம் வென்ற வீரர் புதிய உலக சாதனையைப் படைப்பார் பெல்ப்ஸ்.
இன்று நடந்த 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் பெல்ப்ஸ் தங்கம் வென்றார்.
400 மீட்டர் மெட்லி பிரிவில் தங்கத்தை வென்று தனது வேட்டையை தொடங்கிய பெல்ப்ஸ், நேற்று 6வது தங்கப்பதக்கத்தை வென்றார். இன்று 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் 7வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் மார்க் ஸ்பிட்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
நாளை நடைபெறும் 400 மீட்டர் மெட்லி ரிலே போட்டியில் பெல்ப்ஸ் பங்கேற்கிறார். இதில் வெற்றி பெற்றால் அவர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய சாதனை படைப்பார்.
இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பெல்ப்ஸ் மொத்தம் 13 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications