11 தங்கம்.. அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் உலக சாதனை
{image-Michael Phelps250_13082008.jpg tamil.mykhel.com}பெய்ஜிங்: ஒலிம்பிக் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்களை வென்று உலகிலேயே அதிகமான ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.
இன்று நடந்த 200 மீட்டர் பட்டர்பிளை, 4x200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை வென்று தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்திக் கொண்டார் பெல்ப்ஸ்.
அதிலும் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியை 1:52:03 நிமிடத்தில் கடந்து உலக சாதனையையும் படைத்தார் 23 வயதே ஆன பெல்ப்ஸ்.
அதே போல பெல்ப்ஸை உள்ளடக்கிய 4x200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே போட்டியிலும் அமெரிக்க அணி உலக சாதனை படைத்தது.
இதன் மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மட்டும் 5 தங்கப் பதங்கங்களை பெல்ப்ஸ் வென்றுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 6 தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
மார்க் பிட்ஸ் சாதனையை முறியடிக்க முயற்சி:
1972ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் 7 தங்கம் வென்று, ஒரே ஒலிம்பிக்ஸில் அதிகபட்ச தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ்.
இப்போது அவரது சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளார் பெல்ப்ஸ். அவர் பெய்ஜிங்கில் மேலும் மூன்று நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications