For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதோ வந்து விட்டது இறுதிப் போட்டி.. வரலாறு படைக்குமா இந்தியா?

பிர்மிங்காம்: கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. வலிமை வாய்ந்த இந்தியாவுடன் மல்லுக்கட்டக் காத்திருக்கிறது இங்கிலாந்து.

தோல்வியே காணாத அணியாக, சிங்கம் போல கம்பீரமாக களத்தில் நிற்கிறது இந்தியா. அதேசமயம், இதுவரை எந்த ஒரு பெரிய சாம்பியன் பட்டத்தையும் வென்றிராத இங்கிலாந்து முதல் முறையாக சொந்த நாட்டில் சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றி வரலாறு படைக்க தீவிரமாக உள்ளது.

எட்பாஸ்டனில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் பல பெருமைகள் இந்தியாவுக்குக் கிடைக்கும்.

தொடர்ந்து 4 வெற்றிகள்

தொடர்ந்து 4 வெற்றிகள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அடுத்தடுத்து நான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

வதமான வலுவான அணிகள்

வதமான வலுவான அணிகள்

முதலில் தென் ஆப்பிரிக்காவையும், பின்னர் மேற்கு இந்தியத் தீவுகளையும், அடுத்து பாகிஸ்தானையும் வென்ற இந்தியா, அரை இறுதிப் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது.

தென் ஆப்பிரிக்காவை 26 ரன் வித்தியாசத்தில்

தென் ஆப்பிரிக்காவை 26 ரன் வித்தியாசத்தில்

தென் ஆப்பிரிக்க அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

மேற்கு இந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில்

மேற்கு இந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான மோதலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

பாக்.கையும் 8 விக்கெட் வித்தியாசத்தில்

பாக்.கையும் 8 விக்கெட் வித்தியாசத்தில்

அதேபோல பரமவைரியான பாகிஸ்தானையும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்றது.

அரை இறுதியோடு முடிந்து போன இலங்கை

அரை இறுதியோடு முடிந்து போன இலங்கை

அரை இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா அந்த அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் காலி செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

முதல் முறையாக

முதல் முறையாக

இங்கிலாந்து அணி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் எந்த ஒரு பெரிய சாம்பியன் பட்டத்தையும் வென்றதில்லை. உலகக் கோப்பையை வென்றில்லை. சாம்பியன்ஸ் டிராபியை வென்றில்லை. இப்போது அதைச் சாதிக்க ஆர்வமாக உள்ளது.

இதுவரை தோல்வியே காணாத இந்தியா

இதுவரை தோல்வியே காணாத இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரைப் பொறுத்தவரை இதுவரை இந்தியா இங்கிலாந்திடம் தோற்றதே இல்லை. இந்த முறையும்வென்றால், அதிலும் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றால் அது பெரும் வரலாறாக மாறும்.

30 வருடத்திற்குப் பிறகு வீசுமா வசந்தம்

30 வருடத்திற்குப் பிறகு வீசுமா வசந்தம்

அதேபோல இங்கிலாந்தில் 1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா எந்த பெரிய சாம்பியன் பட்டத்தையும் வென்றில்லை. 1983ல் கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்றதோடு சரி. எனவே இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றால் டோணிக்கும், இந்திய அணிக்கும் பெரும் பெருமை வந்து சேரும்.

2002ல் சாதித்த கங்குலி

2002ல் சாதித்த கங்குலி

இடையில் 2002ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி நேட்வெஸ்ட் டிராபியை வென்றது மட்டுமே இந்தியாவின் ஒரே ஆறுதலாக இருந்தது.

சிங்கிளாக வெல்லப் போகும் சிங்கம்

சிங்கிளாக வெல்லப் போகும் சிங்கம்

2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரை மழை காரணமாக இலங்கையுடன் சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டது இந்தியா. ஆனால் இந்த முறை போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்தியாவின் இளம் படை

இந்தியாவின் இளம் படை

இந்திய வீரர்கள் அட்டகாசமான பார்மில் தற்போது உள்ளனர். ஷிகார் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, திணேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர்.

இங்கிலாந்தும் மிரட்டலாய்

இங்கிலாந்தும் மிரட்டலாய்

அதேசமயம், இங்கிலாந்தும் கூட மிரட்டலாகத்தான் இருக்கிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் பின் ஆகியோர் சிறப்பாக உள்ளனர். இவர்களின் பந்து வீச்சு நிச்சயம் இந்தியாவுக்கு சவால்தான்.

பார்க்கலாம் யார் வெல்கிறார்கள் என்று...!

Story first published: Sunday, June 23, 2013, 11:39 [IST]
Other articles published on Jun 23, 2013
English summary
India will play England in the final of Champions Trophy 2013 here at Edgbaston on Sunday (June 23). India have been unbeaten so far in the tournament with 4 successive wins. India's victorious run started in Cardiff against South Africa in the event's opener on June 6.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+