Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி ஜெயிச்சுச்சு பார்த்தீங்களா இந்தியா..... வாங்க போட்டோ பார்க்கலாம்!

பிர்மிங்காம்: ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் எட்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கும் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன.

மழை வந்தபோதும், இடி இடித்தபோதும், வானம் கருத்தபோதும், சற்றும் கலங்காமல் அட்டகாசமாக ஆடி, பிரில்லியன்ட் ஆக பவுலிங் செய்து, சூப்பராக பீல்டிங் செய்து இங்கிலாந்தை நொந்து போகச் செய்து விட்டது இந்தியா.

இப்படித்தாண்டா விளையாடனும் என்று ஒவ்வொரு ரசிகனும் நேற்று சட்டைக் காலரை - அது இல்லாதவர்கள் - கை முஷ்டி உயர்த்தி, பெருமைப்பட்டுக் கொண்டனர்.

சரி நேற்றைய போட்டியின் சுவாரஸ்ய அம்சங்களைப் பார்ப்போம்....

கடைசி ஓவர் வரை விரட்டி வந்த இங்கிலாந்து

கடைசி ஓவர் வரை விரட்டி வந்த இங்கிலாந்து

நேற்றைய போட்டியில் இந்தியாவின் 129 ரன்களைத் தாண்ட இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தது. இதற்காக கடைசிப் பந்து வரை அவர்கள் போராடிப் பார்த்தார்கள். ஆனால் இந்தியாவின் வியூகம் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டது.

மியான்டட் போல வருமா....

மியான்டட் போல வருமா....

கடைசிப் பந்தில் 6 ரன்கள் தேவை. அந்த சமயத்தில் இந்தியர்கள் மனதில், எங்கே மியான்டட் போல இங்கிலாந்தும் சிக்ஸ் அடித்து வென்று விடுமோ என்று அஞ்சியபடி இருந்தனர். ஆனால் அதைத் தடுத்து விட்டது இந்தியாவின் பவுலிங்.

விடாது பெய்த மழை

விடாது பெய்த மழை

முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பே டான் என்று வந்து விட்டது மழை.. விடாமல் பெய்த மழையால் போட்டி நடக்குமா என்பது சந்தேகமாகி விட்டது ரசிகர்களுக்கு.

சுருக்கி சுருக்கி.. 20 ஓவராக இறங்கிய மேட்ச்

சுருக்கி சுருக்கி.. 20 ஓவராக இறங்கிய மேட்ச்

இதனால் ஓவர்களை முதலில் 24 என்று சுருக்கினார்கள். பின்னர் அதுவும் சுருங்கிப் போய் 20 ஓவர்களானது. இதனால் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான மேட்ச் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அடிச்சு ஆட முடியலையேப்பா

அடிச்சு ஆட முடியலையேப்பா

ஆனால் வீசிய காற்று மற்றும் சீதோஷ்ணம் காரணமாக இந்திய வீரர்களால் பெரிய அளவில் அடித்து ஆட முடியவில்லை. ஆனாலும் நம்மவர்கள் கில்லாடிகளாச்சே.. கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் கிளப்பலாக பயன்படுத்தி ரன்களைக் குவித்தனர்.

இருந்த பார்முக்கு பெருஸ்ஸா கிடைத்திருக்கும்

இருந்த பார்முக்கு பெருஸ்ஸா கிடைத்திருக்கும்

நேற்று இந்திய வீரர்கள் ஷிகார் தவன், விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்த பார்முக்கு நல்ல தட்பவெப்ப நிலை மட்டும் இருந்திருந்தால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை குவித்திருக்கும். கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் அதி வேகமாக ஆடி ரன்களைக் குவித்து விட்டனர்.

போபராவின் அதிரடி

போபராவின் அதிரடி

இங்கிலாந்து பந்து வீச்சாளர் ரவி போபராதான் இந்தியாவின் முக்கிய விக்கெட்களை நேற்று சாய்த்தவர். 4 ஓவர்கள் வீசிய அவர் 3 விக்கெட்களைச் சாய்த்து விட்டார். அதுதான் பேரிடியாக அமைந்தது.

7 விக்கெட்டுக்கு 129

7 விக்கெட்டுக்கு 129

இந்திய வீரர்கள் இருந்த சூழலை சிறப்பாக சமாளித்து சிறப்பாக ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை குவித்தது.

தைரியமாக துரத்திய இங்கிலாந்து

தைரியமாக துரத்திய இங்கிலாந்து

இந்தியாவின் பந்து வீச்சு ஆரம்பம் முதலே சிறப்பாக இருந்தது. இருப்பினும் அதை சமாளித்து தைரியமாக சேஸிங்கை நடத்தினர் இங்கிலாந்து வீரர்கள். விக்கெட்கள் ஒருபக்கம் விழுந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் வெற்றிக்கு அருகில்தான் இருந்தது இங்கிலாந்தின் நிலைமை.

ஜடேஜா வந்தார்.. நிலைமை மாறியது

ஜடேஜா வந்தார்.. நிலைமை மாறியது

ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சுதான் ஆட்டத்தை திசை திருப்பியது. முக்கியமான விக்கெட்களை அவரும், அஸ்வினும் சேர்ந்து மாறி மாறி தூக்கியதால், இங்கிலாந்து தடுமாறிப் போனது.

ரவியும், மார்கனும்

ரவியும், மார்கனும்

இங்கிலாந்தின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியவர்கள் ரவி போபராவும், இயான் மார்கனும்தான். இருவரும் அதிரடியாக ஆடி வந்ததால் இந்தியா சற்றே பயத்துடன்தான் இருந்தது.

நிம்மதி கொடுத்த இஷாந்த்

நிம்மதி கொடுத்த இஷாந்த்

ஆனால் இந்த இருவரையும் அடுத்தடுத்து இஷாந்த் சர்மா அவுட்டாக்கி பேக்கப் செய்ததால் இந்தியா நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

கடைசி ஓவரில் 15 தேவை

கடைசி ஓவரில் 15 தேவை

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் பந்து வீசினார். திக் திக்கில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அஸ்வின் வீசிய அற்புதமான பந்து வீச்சால் இங்கிலாந்தின் ரன் குவிப்பு தடைபட்டுப் போனது. குறிப்பாக கடைசி பந்தை அஸ்வின் படு ஷார்ப்பாக வீசி தூக்கி அடிக்க முடியாமல்

செய்து விட்டார். இதனால் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

தங்க மகன் தவன்

தங்க மகன் தவன்

இந்தியாவின் ஷிகார் தவன் சிறப்பான பேட்டிங்குக்காக தங்க பேட்டைப் பரிசாகப் பெற்றார். அவர் இத்தொடரில் 363 ரன்களைக் குவித்து முதலிடத்தைப் பிடித்தார்.

அவுட் ஸ்டாண்டிங் அஸ்வின்

அவுட் ஸ்டாண்டிங் அஸ்வின்

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நேற்றைய போட்டியில் அபாரமாக பந்து வீசினார். சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும் பறித்தார்.

3 விக்கெட் வீழ்த்திய போபரா

3 விக்கெட் வீழ்த்திய போபரா

இங்கிலாந்தின் ரவி போபரா 3 விக்கெட்களைமுதலில் வீழ்த்தினார். பின்னர் பேட்டிங்கிலும் சிறப்பாக ஜொலித்தார்.

ஜடேஜாவின் கலக்கல்

ஜடேஜாவின் கலக்கல்

இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 33 ரன்களை எடுத்ததோடு, பின்னர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Story first published: Monday, June 24, 2013, 13:46 [IST]
Other articles published on Jun 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+