பீட்டர்சன்- கோலிங்வுட் அரைசதம்-இங்கி. அபாரம்
கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் பீட்டர்சன், கோலிங்வுட் அரைசதம் கடந்து திறமையை நிரூபித்தனர். இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. கார்டிப் நகரில் நடக்கும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
துவக்க வீரர்களாக வந்த குக் 10 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஸ்டிராஸ் 30, ரவி போபரா 35 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த கோலிங்கவுட், நட்சத்திர பேட்ஸ்மேன் பீட்டர்சன்னுடன் ஜோடி சேர்ந்தார்.
பொறுப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். பீட்டர்சன் 69, கோலிங்வுட் 64 ரன்களுக்கு அவுட்டானார்கள்.
அடுத்து வந்த மேத்திவ் பிரையர் அதிரடியாக பேட் செய்தார். இவர் 6 பவுண்டரி உட்பட 62 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். பிளின்டாப் 51 பந்தில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஆண்டர்சன் 2, பிராட் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன், ஹில்பென்ஹால், சிடில் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications