For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரோ கோப்பை: காலிறுதி கனவில் களமிறங்கும் ரஷ்யாவை போலந்து வீழ்த்துமா?

By
Russia Vs Polland
வார்சா: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய 2வது போட்டியில், சொந்த மண்ணில் முதல் போட்டியில் டிராவுடன் துவங்கிய போலந்து, பலமிக்க ரஷ்யாவை எதிர்கொள்கிறது. தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள ரஷ்யா இன்று வெற்றிப் பெறும்பட்சத்தில் காலிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

ஐரோப்பிய நாட்டு அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம் முதலே விறுவிறுப்பாக துவங்கி உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 12.15 மணிக்கு வார்சாவில் நடைபெற உள்ள 'குரூப் ஏ' பிரிவின் லீக் போட்டியில் ரஷ்யா, போலந்து அணிகள் மோத உள்ளன.

தனது முதல் போட்டியில் செக் குடியரசை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரஷ்யா பலம் கொண்ட அணியாக உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் களமிறங்கும் போலந்து முதல் போட்டியில் கிரீஸிடம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இன்றைய போட்டியில் போலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது.

ரஷ்யாவின் சிறந்த கோல் கீப்பரான அகின்பீவ் காயத்தில் இருந்து மீண்டுள்ளது அணிக்கு பலமாக கருதப்படுகிறது. முதல் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளதால் ரஷ்யா அணியில் பெரியளவில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செக் குடியரசு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆலன் ஜகோயவ், ரோமன் ஷிரோகோவ், ஆன்ட்ரி அர்ஷவின் ஆகியோர் இன்றைய போட்டியில் போலந்தின் வெற்றிக்கு தடுப்புக்கற்களாக இருக்க வாய்ப்புள்ளது.

சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள போலாந்து முதல் போட்டியில் டிரா செய்தது பின்னடைவாக கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறுவது குறித்து போலந்து சிந்திக்க முடியும்.

இந்த நிலையில் போலந்து கோல்கீப்பர் வோஜ்சியச் செஸ்னி இன்றைய போட்டியில் கலந்து கொள்ள தடை பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக பிரிஸிம்சலா டைடன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை இரு அணிகளும் 14 முறை மோதி உள்ளன. இதில் போலாந்து 3 முறையும், ரஷ்யா 7 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. 4 போட்டிகள் முடிவு தெரியாமல் டிராவில் முடிந்துள்ளது.

Story first published: Tuesday, June 12, 2012, 15:57 [IST]
Other articles published on Jun 12, 2012
English summary
Poland will take on Russia in Warsaw, hoping to banish memories of a second-half slump that saw Friday's opening encounter with Greece end in a disappointing 1-1 draw.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+