
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கால்பந்து அணிகள் மோதும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து, உக்ரைன் நாடுகளில் நடைபெறுகிறது. வார்சாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து, ரஷ்யா அணிகள் மோதின.
போட்டியின் துவக்கத்தில் அபாரமாக ஆடிய போலந்து அணி வீரர்கள், பலமுறை பந்துடன் கோல் கம்பத்தை நெருங்கினர். ஆனால் ரஷ்ய கோல் கீப்பர் வியாச்செஸ்லாவ் சிறப்பாக செயல்பட்டு கோல் வாய்ப்புகளை தடுத்தார்.
இந்த நிலையில் 37வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலன் சாகோயேவ் அற்புதமாக ஹெட் செய்து கோல் ஒன்றை அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் ரஷ்யா 1-0 என்ற முன்னிலை பெற்றது. ஆனால் போட்டியின் 57வது நிமிடத்தில் போலந்தின் கேப்டன் குபா பிளாஸ்சிகோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.
இதனால் இரு அணிகள் சமநிலையை (1-1) எட்டியது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடியும் முடியவில்லை. போட்டியின் இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 'குரூப்-ஏ' பிரிவில் உள்ள ரஷ்யா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து போலந்து அணியின் பயிற்சியாளர் கூறியதாவது
இக்கட்டான சூழ்நிலையில் இன்று போலந்து அணி சிறப்பாக ஆடியுள்ளது. இன்று போலந்து தோல்வியை தழுவி இருந்தால், தொடரின் அடுத்த சுற்றிற்கு நுழைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்றார்.