மகுடம் இழந்தார் இசின்பயேவா-போலந்து வீராங்கனைக்கு தங்கம்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இன்று நடந்த போல்வால்ட் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா கலந்து கொண்டார். கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் தங்கம் வென்று, பல சாதனைகளை படைத்த இவருக்கு தான் இந்த தொடரிலும் தங்க பதக்கம் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
பீஜிங் ஒலிம்பிக்கில் 5.05 மீ உயரம் தாண்டி போல்வால்ட் மகாராணியாக முடிசூட்டி கொண்ட இவருக்கு இத்தொடரில் வெண்கலம் பதக்கம் கூட கிடைக்கவில்லை.
தங்கப்பதக்கத்ம் 4.75 மீ., தாண்டிய போலந்தின் அன்னா ரோகவ்ஸ்காவுக்கும், வெள்ளி 4.65 மீ., தாண்டிய அமெரிக்காவின் செல்சியா ஜான்சனுக்கும் வழங்கப்பட்டது. வெண்கலத்தை போலந்தின் மோனிகா பிரக் தட்டி சென்றார்.
பிரேசர் முதலிடம்...
பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி பிரேசர் 10.73 வினாடிகளில் வந்து தங்கம் வென்றார். வெள்ளியை ஜமைக்காவின் கெரன் ஸ்டூவர்ட்டும் (10.75), வெண்கலத்தை அமெரிக்காவின் கேர்மெலிடா ஜெட்டரும் (10.90) வென்றனர்.
பிகிலேவுக்கு தங்கம்...
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீ ஓட்டத்தில் பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற எதியோப்பிய வீரர் கெனனிசா பிகிலே முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை எரித்ரேய வீரர் ஜெர்செனய் தடேசியும், மூன்றாவது இடத்தை கென்யாவின் மோசஸ் மாசாயும் கைப்பற்றினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications