சாம்பியன்ஸ் டிராபி: பாண்டிங், வாட்சன் சதம்-பைனலில் ஆஸி.

தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஸ்டிராஸ் 14, ஓவைஸ் ஷா டக் அவுட், கோலிங்வுட் 34 ரன்களுக்கு அவுட்டானார்கள்.
கடைசியில் வந்த லூக் ரைட், பிரஸ்னன் ஜோடி இங்கிலாந்து ஸ்கோரை விரைவாக உயர்த்தியது. ரைட் 48 ரன்கள் எடுத்தார். பிரஸ்னன் 76 பந்தில் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். இங்கிலாந்து 47.4 ஓவரில் 257 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பெய்ன் 4 ரன்களுக்கு அவுட்டாகி, ஏமாற்றம் தந்தார். அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை உண்டு, இல்லை என செய்தது.
வாட்சன் 7 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 132 பந்தில் 136, பாண்டிங் 1 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 41.5 ஓவரில் 1 விக்கெட் இழ்பபுக்கு 258 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.
இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியி்ல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications