Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்வித்தை தனி நபர் பிரிவில் பிரனிதா தோல்வி

பெய்ஜிங்: இந்திய வில்வித்தை வீராங்கனை பிரனிதா வர்தினேனி தனி நபர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், வட கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரனிதா வர்தினேனி பங்கேற்றார். பெய்ஜிங்கில் இன்று நடந்த போட்டியில்
ஆஸ்திரேலிய வீராங்கனை ஜேன் வாலருடன் மோதினார். இதில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

ஆனால் அந்த சுற்றில், அவர் வட கொரிய வீராங்கனை அல் சில் குவோனியுடன் மோதினார்.

இப்போட்டி கடுமையாக இருந்தது. இறுதியில், 99-106 என்ற புள்ளிகள் கணக்கில் பிரனிதா தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஏற்கனவே, இந்திய வீராங்கனைகள் பாம்பேலா தேவி, டோலா பானர்ஜி மற்றும் பிரனிதா ஆகியோர் அடங்கிய குழு சீனாவிடம் தோல்வியுற்றிருந்தது.

தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோலாவும், பாம்பேலாவும் தகுதிச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி விட்டனர். பிரனிதா சற்று நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட்டு பின்னர் தோல்வியைத் தழுவினார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+