சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கனவை தகர்த்தது மழை-ஆஸி. போட்டி ரத்து

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் வாட்சன், நெஹ்ரா பந்தில் டக் அவுட்டானார். அடுத்து வந்த பாண்டிங், பெய்னேவுடன் ஜோடி சேர்ந்தார்.
துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் இந்திய பந்துவீச்சை ஒரு கை பார்த்தது. பெய்னே 56, பாண்டிங் 65 ரன்களுக்கு அவுட்டானார்கள். அடுத்து வந்த மைக்கேல் ஹசி 65 பந்தில் 67 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா 42.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தநிலையில் மழை பெய்தது. சிறிதுநேரத்தில் நின்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் மழை விடவில்லை. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டது. புள்ளிகள் இரு அணிக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
எல்லாம் பாக். கையில்...
2 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இதையடுத்து இதே பிரிவில் 2 போட்டிகளில் 4 புள்ளி பெற்ற பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
தற்போது இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட இழந்துவிட்டது. ஆனால், நாளை நடக்கும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் தோற்று, அதே நேரத்தில் நாம் வெஸ்ட் இண்டீசை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
ஆஸ்திரேலியாவை வென்ற நமக்கு பாகிஸ்தான் கைகொடுக்குமா என்பது நாளை தான் தெரியும்...
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications