உ.கோ. மல்யுத்தம்- வரலாறு படைத்த ரமேஷ்

டென்மார்க்கின் ஹெர்னிங் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. சமீபத்தில் நடந்த இத்தொடரின் அரையிறுதியில் பங்கேற்ற இந்திய வீரர் ரமேஷ் குமார், அஜர்பெய்ஜனை சேர்ந்த சம்சுல்வரா சம்சுல்வராயோவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவரது தங்கப் பதக்க ஆசை தகர்ந்து போனது.
இருந்த போதிலும் மனம் தளராமல் போராடிய அவர் ரீபேஜ் சுற்றின் இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதில் மால்டோவின் அலெக்சான்டர் புர்காவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார்.
ஆனால், முதல் ரவுண்டில் ரமேஷ் குமார் 0-3 என பின்தங்கினார். 2வது ரவுண்டில் இரண்டு வீரர்களும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்தனர். 3வது மற்றும் கடைசி ரவுண்டில் தாக்குதல் பாணியில் அசத்திய ரமேஷ் குமார் 5 புள்ளிகள் கைப்பற்றினார். அஜர்பெய்ஜன் வீரருக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
இரண்டு வீரர்களும் தலா 7 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர். அம்பயர்கள் தொழில்நுட்ப புள்ளிகள் அடிப்படையில் ரமேஷ் குமார் வென்றதாக அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 32 ஆண்டுகளாக பதக்கமே இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பி வந்த இந்திய வீரர்களுக்கு முதல் நம்பிக்கை கிடைத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications