Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் இந்திய துப்பாக்கி சுடும் அணி அறிவிப்பு - ரத்தோருக்கு இடமில்லை

டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜ்வர்த்தன்சிங் ரத்தோரின் பெயர் இடம் பெறவில்லை. இந்திய தங்க மகன் அபினவ் பிந்த்ராவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. இதன்படி இந்த ஆண்டு லண்டன் நகரில் வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க உள்ள 11 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஓலிம்பிக்கில், தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ககன்நரங் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் 2004ம் ஆண்டு ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜ்வர்த்தன்சிங் ரத்தோரின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.

லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ள இந்திய துப்பாக்கி சுடும் அணியின் விவரம்:

1.ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவு: அபினவ் பிந்த்ரா, ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புக்
2.பெண்களுக்கான 50 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவு: ஜாய்தீப் கரம்கர், அனுராஜ் சிங், ஹீனாசிந்து
3.ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவு: ரஹி சரண்பேட், அனுராஜ் சிங்
4.ஆண்களுக்கான டிராப்: மனவஜித்சிங் சாந்து
5.பெண்களுக்கான டிராப்: ஷகன் செளதிரி
6.டபிள்டிரப்ட்: ரோன்ஜன் சோடி
7.ரேப்பிட் பயர் பிஸ்டல்: விஜய்குமார்.

Story first published: Monday, February 20, 2012, 16:20 [IST]
Other articles published on Feb 20, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+