Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: போட்டியாளர்களுக்கு 1,50,000 காண்டம்கள் விநியோகிக்க திட்டம்

Condoms
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கு சுமார் 1,50,000 காண்டம்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு போட்டியாளருக்கும் சுமார் 15 காண்டம்கள் வீதம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஒரு கூட்டம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி குறித்து சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதாவது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் 15 காண்டம்கள் வீதம் மொத்தம் 1,50,000 காண்டம்கள் அளிக்கப்பட உள்ளது.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்ட காண்டம்களை தவிர, கூடுதலாக தேவைப்பட்டாலும், ஒலிம்பிக் கிராமத்தில் ஆங்காங்கே உள்ள மருந்து கடைகளில் பெற்று கொள்ளலாம்.

முன்னதாக கடந்த 2008ம் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் இதேபோல காண்டம்கள் விநியோகிக்கப்பட்டது. அப்போது சுமார் 1 லட்சம் காண்டம்கள் விநியோகிக்கப்பட்டது. அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் பெயர் வெளியிடாத அமெரிக்க பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் எழுதிய 'பட் ஆப்' என்ற புத்தகத்தில் ஒலிம்பிக் கிராமத்தில் நடைபெறும் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டது.

எழுத்தாளர் மற்றும் வெளியிட்டாளர் இல்லாத அந்த புத்தகத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில இதோ:

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். பாய் பிரண்டுகளை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது.

மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும்.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர்.

வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதால், ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

ஒலிம்பிக் கிராமத்தில் செக்ஸ் உறவு கொள்வது கடந்த 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில் இருந்தே நடைபெற்று வருகிறது. இதனால் சியோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு முதல் முறையாக 8,500 காண்டம்கள் விநியோகிக்கப்பட்டது. அதன்பிறகு 1992 பாசிலோனா ஒலிம்பிக் போட்டியில் 50 ஆயிரம் காண்டம்கள் விநியோகிக்கப்பட்டது. 2000 சிட்னி ஒலிம்பிக் இந்த எண்ணிக்கை 70 ஆயிரமாக உயர்ந்தது.

ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் போட்டியாளர்கள், தங்களுடன் ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவதால், அத்துமீறிய செக்ஸ் உறவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, July 19, 2012, 17:49 [IST]
Other articles published on Jul 19, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+