Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் உலகின் 'ஜெமினி கணேசன்' ரிக்கி பான்டிங்!

Ricky ponting and Jemini Ganesan
பெர்த்: எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகிய இரு பெரும் இமயங்களுக்கு நடுவே தனது பாணியில் கலக்கலாக ஸ்கோர் செய்தாரோ ஜெமினி கணேசன், அதேபோல கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகிய இரு பெரும் சூறாவளிகளுக்கு நடுவே புயலாக புகுந்து கலக்கியவர் ரிக்கி பான்டிங்.

நவீன கிரிக்கெட்டின் பேட்டிங் மும்மூர்த்திகளில் ரிக்கி பான்டிங்குக்கும் ஸ்பெஷல் இடம் உண்டு. சச்சினும், லாராவும் ஒரு ஸ்டைலில் கலக்கினார்கள் என்றால் ரிக்கி தனது ஸ்டைலில் இவர்களுக்கு நிகரான அருமையான அதிரடியான பேட்ஸ்மேனாக விளங்கினார். இவரது சிறப்பான ஆட்டத்தாலும், கேப்டன்ஷிப்பாலும் ஆஸ்திரேலிய அணி பல போட்டிகளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் ரிக்கி பான்டிங் தலைமையில் உலகின் அத்தனை அணிகளையும் ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா என்றால் அது பொய் இல்லை.

அருமையான வலது கை பேட்ஸ்மேனான ரிக்கி பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தக் கூடியவர். ஸ்லிப்பில் இவரைத் தாண்டி பந்து போவது கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதாவது பந்து வீசியும் கலக்குவார் ரிக்கி.

பன்டர் என்று சக வீரர்களால் அழைக்கப்படும் ரிக்கி, 1992ம் ஆண்டு டாஸ்மானியா அணிக்காக முதல் தர கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 17தான். 1995ம் ஆண்டுதான் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார் ரிக்கி. நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அவர் கிரிக்கெட் உலகிலிருந்து விடைபெறுவது சுவாரஸ்யமான ஒரு ஒற்றுமை.

1995ம் ஆண்டிலேயே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகம் ஆனார் ரிக்கி. ஆரம்பத்தில் சரிவர ஆடாமல் அலட்சியமாகவே இருந்து வந்தார் ரிக்கி. ஒழுங்கீன சர்ச்சைகளிலும் சிக்கினார். இதனால் அடிக்கடி அணியிலிருந்து நீக்கப்படுவது வாடிக்கையானது. ஆனால் 1999ம் ஆண்டுக்குப் பின்னர் ரிக்கி சீர்பட ஆரம்பித்தார். இதனால் 2002ம் ஆண்டு அவரைத் தேடி கேப்டன் பதவி வந்தது.

2002ம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பின்னர் 2004 முதல் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும் மாறினார். அதன் பின்னர் ரிக்கியின் சதிராட்டம் தொடங்கியது. மோதிய போட்டிகளிலெல்லாம் எதிரணியை துவம்சம் செய்யத் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியர் ரிக்கி மட்டுமே. டெஸ்ட் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்தவராக ரிக்கி உள்ளார். சச்சின் எப்படி சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறாரோ அதேபோல ரிக்கியும் பல சாதனைகளை பாக்கெட்டில் போட்டு வைத்துள்ளார்.

புள்ளிவிவரப்படி பார்த்தால் ரிக்கிதான் உலக அளவில் இதுவரை இருந்த கேப்டன்களிலேயே மிகவும் வெற்றிகரமானவர் என்பது மிகவும் ஆச்சரியகரமான ஒரு சாதனையாகும். 2004 முதல் 2010 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இவர் கேப்டனாக இருந்து மோதிய போட்டிகள் மொத்தம் 77. இதில் 48 போட்டிகளை ரிக்கி வென்று சாதனை படைத்துள்ளார். வேறு எந்தக் கேப்டனும் இப்படி ஒரு சாதனையுடன் இல்லை.

அதேபோல ஒரு வீரராக 100 டெஸ்ட் வெற்றிகளைக் கண்டுள்ளார் ரிக்கி. இதுவும் கூட ஒரு சாதனையாகும். அதேபோல தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா ஒரு சதம் போட்டு கலக்கியவர் ரிக்கி.

இப்படி அட்டகாசமான வீரராக வலம் வந்த ரிக்கி பான்டிங், ஆஸ்திரேலிய அணியி்ன் தூணாக விளங்கியவர்.

பெர்த்தில் இந்த வாரம் தொடங்கும் டெஸ்ட் போட்டி ரிக்கி பான்டிங்குக்கு 168வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் அதிக டெஸ்ட் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் ஸ்டீவ் வாவின் சாதனையை சமன் செய்கிறார் ரிக்கி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரராக இதுவரை வாவ் மட்டுமே இருந்து வந்தார். தற்போது அவருடன் இணைகிறார் ரிக்கி.

Story first published: Thursday, November 29, 2012, 11:33 [IST]
Other articles published on Nov 29, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+