For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் தத்தி தாண்டுதல் போட்டியில் 3 பெளல்களை செய்த இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி வெளியேறினார்

By
London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தத்தி தாண்டுதல் போட்டியின் தகுதி சுற்றுப் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி, 3 வாய்ப்புகளிலும் பெளல் செய்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தத்தி தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஏ மற்றும் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி இடம் பெற்றார்.

தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரிக்கு அளிக்கப்பட்ட 3 வாய்ப்புகளையும், பெளல் செய்தார். இதனால் எந்த புள்ளிகளும் எடுக்காமல் போட்டியில் இருந்து வெளியேறினார். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ரஞ்சித், தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 17.07 மீட்டர் தாண்டியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தகுதிச் சுற்று போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் வீரர் பெஞ்சமின் 17.6 மீட்டர் தாண்டினார். பி பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர் 17.21 மீட்டர் தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவிற்கு தடகளத்தில் மற்றொரு பதக்க வாய்ப்பு பறிபோனது.

Story first published: Tuesday, August 7, 2012, 18:21 [IST]
Other articles published on Aug 7, 2012
English summary
Renjith Maheshwary crashed out of the men's triple jump competition at the London Olympic Games after fouling all three attempts in the qualification round on Tuesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+