Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை 3வது டெஸ்ட் - தொடரை வெல்லுமா இந்தியா?

Sachin
கொழும்பு: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் தொடங்குகிறது. இதை இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியா - இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கொழும்புடெஸ்ட் போட்டியில் இலங்கையும், காலி போட்டியில்இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் தொடங்குகிறது. காலி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோன்ற இன்னொரு ஆட்டத்ைத கொழும்பு போட்டியிலும் இந்தியா வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதிக ரன்களைக் குவித்து இலங்கை தொடரில் உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஏமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல மூத்த வீரர்களான கங்குலி, டிராவிடும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. நெருக்கடியான நேரத்தில் இவர்கள் இந்தியாவுக்கு கை கொடுக்கவில்லை.

அதேசமயம், வீரேந்திர ஷேவாக் முதல் டெஸ்ட்டிலிருந்தே அதிரடியாக ஆடி வருகிறார். ஹர்பஜன் சிங்கும், காலி டெஸ்ட்டில் தனது கலக்கலான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

ஆனால் இலங்கை தரப்பில் முரளிதரனும், அஜந்தா மெண்டிஸும் கலக்கி வருகின்றனர். பேட்டிங்கிலும் அவர்கள் சிறப்பாக உள்ளனர்.

இந்தியாவின் பந்து வீச்சு இன்னும் பலமாகவில்லை. இஷாந்த் சர்மா காலி டெஸ்ட்டில் சற்றே பயமுறுத்தினார். ஜாகிர்கான் இன்னும் விஸ்வரூபம் எடுக்கவில்லை.

இப்படி தட்டுமுட்டு தடுமாற்றத்துடன் இந்தியா தொடரை சமண் செய்து வைத்துள்ளது. கொழும்பு டெஸ்ட் போட்டியில் முழு வீச்சில் முழு பலத்தையும் இந்தியா வெளிப்படுத்துமானால் தொடரை வெல்வது உறுதி.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+