ரஞ்சன் சோதிக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது! விராத் கோஹ்லி, சிந்துவுக்கு அர்ஜூனா விருது!!
டெல்லி: விளையாட்டின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னாவுக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டபுள் டிராப் போட்டிப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர் ரஞ்சன் சோதி. அவர் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் கோஹ்லி, சிந்து ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை ஏற்று ஜிம்பாப்வே அணியுடனான தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியவர் கோஹ்லி.

அண்மையில் நிறைவடைந்த உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றவர் பி.வி. சிந்து.
இவர்களுக்கான விருதுகள் வரும் 29-ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications