Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வழியாக முதல் தங்கத்தைப் பெற்றது இங்கிலாந்து!

England Rowers
லண்டன்: ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வரும் இங்கிலாந்து நாட்டுக்கு இப்போதுதான் முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. படகுப் போட்டியில் அந்த நாட்டு பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

இங்கிலாந்துக்குக் கிடைத்த முதல் தங்கத்தை அந்த நாட்டு மக்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மேலும் போட்டி நடந்த டோர்னி லேக் பகுதியிலும் ஆரவாரம் கொண்டாட்டமாக இருந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி ஐந்து நாட்கள் கழித்த நிலையில் இங்கிலாந்துக்கு முதல் தங்கம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதக்கத்தை படகுப் போட்டியில் ஜோடிப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் ஹெதர் ஸ்டேனிங் மற்றும் ஹெலன் குளோவர் ஆகியோர் பெற்றனர்.

இங்கிலாந்துக்கு முதல் தங்கம் கிடைத்த செய்தி பரவியதும், லேக் பகுதிக்கு சைக்கிள்களில் ஏராளமானோர் படையெடுத்து வந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராமேன்களும் படம் எடுக்க குவிந்து விட்டனர்.

ஏற்கனவே ரோடு ரேஸில் இங்கிலாந்து தங்கத்தைத் தவற விட்டது. அதை போல நீச்சலிலும் சோபிக்கவில்லை. நீச்சலில்தான் இங்கிலாந்து பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் ஏமாற்றிச் சென்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கான படகுப் போட்டியில் இங்கிலாந்து தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தங்கம் வென்ற வீராங்கனைகளில் ஒருவரான ஸ்டேனிங் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விரைவில் ஆப்கானிஸ்தானுக்குப் பணிக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 2, 2012, 10:27 [IST]
Other articles published on Aug 2, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+