Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

Football
கொழும்பு: தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி 11-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது. இதன்மூலம் தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்.ஏ.எப்.எப்) சார்பில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், பூடான், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் 'ஏ' பிரிவை சேர்ந்த இந்தியா, பூடான் அணிகள் மோதின. போட்டியின் பெரும்பாலான நேரம் பந்து இந்திய வீராங்கனைகளிடம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை துளி கூன் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு கமலா தேவி, சுஸ்மிதா மாலிக், பிங்கி மாகர் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 6-0 என்ற முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர, போட்டியின் முடிவில் 11-0 என்ற கோல் கணக்கில் இந்திய அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 9 புள்ளிகளுடன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

Story first published: Wednesday, September 12, 2012, 19:17 [IST]
Other articles published on Sep 12, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+