For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமரவீரா சதம்:இலங்கை 452-நியூசி. ஏமாற்றம்

By Staff

காலே: காலே டெஸ்டில் சமரவீரா சதம் கண்டார். இவர் 159 ரன்கள் எடுக்க, இலங்கை முதல் இன்னிங்சில் 452 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிவரும் முதல் டெஸ்ட் காலேவில் நடந்து வருகிறது. இலங்கை முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. ஜெயவர்தனே 108, சமரவீரா 82 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜெயவர்தனே 114 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையி்ல் சிறப்பாக விளையாடிய சமரவீரா சதம் கடந்தார். மேத்திவ்ஸ் 39, குலசேகரா 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இலங்கை முதல் இன்னிங்சில் 452 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

நியூசிலாந்து சார்பில் கிறிஸ் மார்டின், கேப்டன் டேனியல் வெட்டோரி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய இலங்கை அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. துவக்க வீரர் குப்டில் 24 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த பிளைன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து, 365 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+