For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வி்ன்டி சிட்டி ஸ்குவாஷ் ஓபன்-பாக். வீரரை வீழ்த்தி செளரவ் கோஷல் சாம்பியன்

By

சிகாகோ: சிகாகோ நகரில் நடைபெற்ற வின்டி சிட்டி ஓபன் ஸ்குவாஷ் 2012 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்திய இந்திய வீரர் செளரவ் கோஷல் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வின்டி சிட்டி ஓபன் ஸ்குவாஷ் -2012 தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் உலக ஸ்குவாஷ் தரவரிசையில் 27வது இடத்தில் உள்ள இந்தியாவின் செளரவ் கோஷல், 2ம் இடத்தில் உள்ள பாகிஸ்தானின் யாசிர் பட் உடன் மோதினர்.

போட்டியின் முதல் 2 செட்களை 11-8, 15-13 என்ற புள்ளிகளில் செளரவ் கோஷல் கைப்பற்றினார். அதில் சுதாரித்து கொண்ட யாசிர் பட் 3வது செட்டை 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று நெருக்கடி கொடுத்தார். இந்த நிலையில் போட்டியின் 4வது செட்டை 11-5 என்று கணக்கில் செளரவ் கோஷல் எளிதாக கைப்பற்றினார்.

இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்தியா வீரர் செளரவ் கோஷல் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Story first published: Tuesday, February 14, 2012, 16:13 [IST]
Other articles published on Feb 14, 2012
English summary
The six-time Indian champion, Saurav Ghosal added another feather to his cap after he registered a comfortable victory over his Pakistani rival 3-1 to become the new 'Windy City Open Squash 2012' champion.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+