நான் அப்பாவி - டோப் சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை ஷைலஜா

சமீபத்தில் தேசிய ஊக்க மருந்துக்கு எதிரான ஏஜென்சி நடத்திய சோதனையில் ஷைலஜா பூஜாரி ஊக்க மருந்து உட் கொண்டது நிரூபணமானது. இதையடுத்து பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் ஷைலஜா. இவர் இதுபோல சிக்குவது 2வது முறை என்பதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தான் ஒரு அப்பாவி என்று கூறியுள்ளார் ஷைலஜா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகஸ்ட் 28ம் தேதி எனக்கு நடந்த சோதனையில் நான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரிய வந்தது. எனவே நான் மீண்டும் ஒரு சோதனைக்கு ( பி சாம்பிள் சோதனை) உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
இந்த சோதனை குறித்த அறிக்கை நகல் எனக்கு இதுவரை வந்து சேரவில்லை என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications